Silk Smitha: கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி இளைஞர்களின் கனவு கன்னியாக மாறிய நடிகை சில்க் ஸ்மிதா குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 80 காலகட்டத்தில் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதா குறுகிய காலத்திலேயே ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.
இவர் மலையாளத்தில் புஷ்யராகம் என்ற படத்தின் மூலம் 1979ஆம் ஆண்டு திரைவுலகிற்கு அறிமுகமானார். இதனை அடுத்து தமிழில் 1980ஆம் ஆண்டு நடிகர் வினு சக்கரவர்த்தி எழுதிய வண்டி சக்கரம் படத்தின் மூலம் அறிமுகமான இவருடைய முதல் திரைப்படம் நல்ல ரீச்சினை பெற்று தந்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து மூன்றாம் பிறை, நீதி பிழைத்தது, சகலகலா வல்லவன், மூன்று முகம், கோழி கூவுது உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். இவர் முன்னணி நடிகராக இருந்தாலும் புதுமுக நடிகரின் படங்களாக இருந்தாலும் எந்த ஒரு பிரிவு பார்க்காமல் நடிப்பார் என்பதால் பல இயக்குனர்களுக்கு சில்க் ஸ்மிதாவை பிடித்து விட்டது.
மேலும் சிலுக்கு ஸ்மிதா தங்களின் படங்களில் ஒரு பாடலில் நடித்தால் கூட அந்த படம் ஹிட்டடித்து விடும் என்ற நிலைமை ஏற்பட்டது. எனவே சில்க் ஸ்மிதாவின் கால்ஷிட்டக்காக ஏராளமான தயாரிப்பாளர்கள் காத்திருந்தனர். இவ்வாறு தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இருந்தார். கடைசியாக 1996ஆம் ஆண்டு சரவணன் நடிப்பில் திரும்பி பார் என்ற படத்தில் நடித்தார் இந்த படம் வெளியான சில மாதங்களிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இவருடைய மரணம் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இறப்பதற்கு முன்பு சில்க் ஸ்மிதா விழா ஒன்றில் பங்கேற்க சென்று உள்ளாரார். அப்பொழுது அந்த விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வந்துள்ளார். அவரை பார்த்தும் அனைவரும் எழுந்து நின்று மரியாதை கொடுக்க ஆனால் சில்க் ஸ்மிதா அமர்ந்திருந்தார். அப்பொழுது அங்கிருந்த அவர்கள் சில்க் ஸ்மிதாவிடம் எழுந்திருக்குமாறு சொல்ல அதை கேட்காமல் அப்படியே உட்கார்ந்த உள்ளார் சில்க் ஸ்மிதா.
பிறகு இதனை கவனித்த சிவாஜி கணேசன் சிலுக்கு ஸ்மிதா திமிரு பிடித்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் அது உண்மைதான் போல என்று சொன்னதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த சமயத்தில் திரைவுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. சில்க் ஸ்மிதா மற்றும் சிவாஜி கணேசன் இருவரும் இணைந்து வெள்ளை ரோஜா, நீதிபதி தீர்ப்பு, சுமங்கலி, தராசு உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கேரக்டர்களிலும், ஒரு பாடலுக்கு நடனமும் ஆடிவுள்ளார்.