Leo Pre Booking: தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது லியோ படத்தின் பிரீ புக்கிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது.
தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஏற்கனவே மாஸ்டர் திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தினை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் ஆக்சன் படமாக அமைந்தாலும் கலவை விமர்சனத்தை பெற்றது இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியிருந்தார்.
எனவே இந்த படம் மாபெரும் தோல்வியினை சந்தித்ததனால் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இதனை அடுத்த மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் இரண்டாவது முறையாக லியோ திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் தொடர்ந்து லியோ படத்தின் அப்டேட்டுகள் வெளியாக ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்பொழுது லியோ திரைப்படம் வசூலில் UK- வில் பட்டையை கிளப்பி வருகிறதாம் ரஜினியின் ஜெயிலர் படம் முதல் நாளே ப்ரீ புக்கிங்கில் £222,777 வசூல் செய்ததாக தகவல் வெளியானது. இது இந்திய மதிப்பில் ரூபாய் 2,26,37,462 கோடி ஆகும். அதே போல் லியோ படம் வெளியாக 23 நாட்கள் இருக்கும் நிலையில் தற்பொழுது வரையிலும் £2,26,64,299 வரை ப்ரீ புக்கிங்கில் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதன்படி இந்திய மதிப்பில் ரூபாய் 2,26,64,299 ஆகும். ஜெயிலர் படத்தை விட லியோ படம் அதிக வசூலை செய்துள்ளது. இவ்வாறு லியோ திரைப்படத்திற்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை அடுத்து வருகின்ற 30ஆம் தேதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.