இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் மாடல் அழகி.? சோகத்தில் ரசிகர்கள்

Bigg Boss 7: பிக்பாஸ் சீசன் 7-ல் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக இந்த வாரம் வெளியேற இருக்கும் நபர் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிக்பாஸ் 7வது சீசன் தொடங்கப்பட்ட நிலையில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளார்கள். ஆரம்பமான சில நாட்களிலேயே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

அப்படி நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டாவது நாளே கேப்டனை கவரத் தவறியதாக பவா செல்லதுரை, நிக்ஸன், வினுஷா, அனன்யா, ரவீனா, ஐஷீ ஆகிய ஆறு போட்டியாளர்களும்  பிக்பாஸ் வீட்டில் இருந்து ஸ்மால் பாஸ் வீட்டுக்கு சென்றுள்ளனர்.  இவ்வாறு சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் விசித்ரா.

ஜூம் பண்ணி பாத்தா மூஞ்சில இருக்கிற மொத்த சுருக்கமும் தெரியுது.. 50 வயதில் 20 வயது பெண் போல் ஃபோட்டோ ஷூட்! ஐஸ்வர்யா ராயை கலாய்க்கும் நெட்டிசன்கள்

அதாவது சக போட்டியாளர்களின் ஆடை குறித்து பேசியது, பிறகு அனன்யாவின் உடம்பில் இருக்கும் டாட்டூவை காட்டச் சொன்னது போன்ற இவருடைய செயல்பாட்டினால் ஹவுஸ்மேட்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர். அப்படி இதனை அடுத்து தற்பொழுது மேலும் பெரும் சர்ச்சையில் சிக்கிவுள்ளார்.

அதாவது வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா 9ம் வகுப்பு மட்டுமே முடித்திருக்கும் நிலையில் எனவே படிப்பறிவு மிகவும் அவசியம் என விசித்ரா கூறியதனால் ஜோவிகா உச்சகட்ட கோபத்தில் அனைவர் முன்பும் வச்சி செய்து விடுகிறார். இவ்வாறு சுவாரசியமான பிக்பாஸ் ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்த சூழலில் இந்த வாரம் நாமினேஷில் பவா செல்லதுரை, அனன்யா, பிரதீப் ஆண்டனி, யுகேந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் இடம்பெற்று இருக்கிறார்கள் இவர்களில் யார் போவார் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. அதன்படி பவா செல்லதுரை, விசித்ரா, யுகேந்திரன் ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனாக நடிக்க போவது யார்.? சரவணன் விக்ரம் குறித்து ஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோ..

ananya rao
ananya rao

அந்த வகையில் இந்த வாரம் அனன்யா ராவ் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என கூறப்படுகிறது. இவருக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் கிடைத்திருக்கும் நிலையில் முதல் வாரம் நாமினேஷன் செய்யப்பட்டிருந்தாலும் எவிக்சன் இல்லாமல் போவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.