‘ஜவான்’ படம் தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா.?

jawan movie
jawan movie

Jawan Box Office: ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடைப் போட்டு வரும் நிலையில் தற்போது வரையிலும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லி தமிழில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்ததன் மூலம் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர் என்ற பெயரை பெற்றார். அந்த வகையில் தற்பொழுது இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பணக்கார இயக்குனர்களில் ஒருவராக அட்லி திகழ்ந்து வருகிறார்.

இவ்வாறு இந்த நான்கு படங்களையும் தொடர்ந்து பாலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அட்லி ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தினை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டி உள்ளார்.

ஜவான் திரைப்படம் கடந்த 7ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் முதல் நாள் முதல் காட்சியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தது. மேலும் அதே சமயம் ஜவான் படம் மற்ற திரைப்படங்களின் காப்பி எனவும் விமர்சனம் எழுந்த நிலையில் தொடர்ந்து ஒரு நாளைக்கு 100 கோடிக்கு குறையாமல் வசூல் செய்து வந்த ஜவான் படத்தின் வசூல் திடீரென தற்போது குறைந்துள்ளது.

அப்படி ஜவான் திரைப்படம் உலக அளவில் 570 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக இருந்ததால் வசூல் கணிசமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இதுவரையிலும் தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாய் வரை ஜவான் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.