Vijayakanth: வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்தான் நடிகை பிரமிளா ஜோஷாய். மறைந்த நடிகர் விஜயகாந்த் நடிப்பில் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் வைதேகி காத்திருந்தாள். இப்படத்தில் கர்நாடகாவை சேர்ந்த பிர்மிளா ஜோஷாய்.
இதில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் இந்த படத்தில் வரும் ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு என்ற பாடல் இன்றளவிலும் ரசிகர்களின் ஃபேவரட் பாடலாக உள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து ரஜினிகாந்த், சரிதா நடிப்பில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான தப்பு தாளங்கள் என்ற படத்தில் பிரமிளா ஜோஷாய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக சம்பளம் வாங்கும் வில்லன் நடிகர்.. இத்தனை கோடியா.?
இவ்வாறு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் வைதேகி காத்திருந்தாள் என்ற படத்தில் வைதேகி என்ற கேரக்டர் தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை கொடுத்தது. இவ்வாறு இந்த பிரபல நடிகை பிரமிளா ஜோஷாய் அவர் வேறு யாருமில்லை தமிழ், கன்னட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கும் மேக்னா ராஜின் தாய் ஆவார்.

அதாவது பர்மிளா ஜோஷாய் தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார் அதேபோல இவருடைய மகள் மேக்னா ராஜ் தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகை மேக்னா ராஜ் தனது தாய் தந்தையுடன் இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வரலாறு வருகிறது.
சில காலங்களாக பெரிதாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த மேக்னா ராஜ் சமீப காலங்களாக மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அப்படி கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான Tatsama Tadbhava என்ற தில்லரான படத்தில் நடித்திருந்தார்.