நானி, கீர்த்தி சுரேஷின் ‘தசரா’ படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்து வெளியான தகவல்.!

dasaraa
dasaraa

தமிழ், தெலுங்கு என இரு திரைவுலகிலும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வருகின்ற 30ஆம் தேதி அன்று தசரா படம் வெளியாக இருக்கும் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

அதாவது பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் தசரா படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த ஏராளமான புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலானது

மேலும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய நிலையில் இந்த படம் வருகின்ற மார்ச் 30ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இவ்வாறு தசரா படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்பொழுது படக்குழுவினர்கள் தசரா படத்தின் ப்ரோமோஷன் பணியில் மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் சற்று முன்பு இந்த படத்தின் சென்சார் தகவல்கள் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்களை பட குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த படம் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் அதாவது 156 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட படமாக உருவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் சந்தோஷ நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் நிலையில் சுமார் 65 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சமுத்திரகனி, பிரகாஷ்ராஜ், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.