Actor Vijayakanth: ஒரே ஆண்டில் 18 திரைப்படங்களில் நடித்து சினிமா துறையில் வரலாற்று சாதனை புரிந்த நடிகராக விஜயகாந்த் விளங்குகிறார். மேலும் 1999ஆம் ஆண்டு நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்ற விஜயகாந்த் நடிகர் சங்கத்திலிருந்து கடன்களை அடைத்து விட்டு தான் வெளியில் வரும் பொழுது மீதம் பணமும் வைத்திருந்தார் இதனால் நடிகர் சங்கம் முன்னேற்றத்தை கண்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் உள்ள ராமானுஜபுரம் என்ற சிறிய கிராமத்தில் அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியினர்களுக்கு 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி மகனாக பிறந்த விஜயகாந்த் சிறு வயது இருக்கும் பொழுது மதுரைக்கு இடம்பெயர்ந்தனர். பிறகு பிரேமலதாவை திருமணம் செய்துக் கொண்டார் இவர்களுக்கு தற்பொழுது விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
சிறுவயதிலிருந்தே எம்ஜிஆர் மீதும் கலை மீதும் ஆர்வம் இருந்த விஜயகாந்த் 10ம் வகுப்பு படித்து முடித்த பிறகு சினிமாவில் நடிக்க ஆர்வம் காண்பித்தார். அந்த வகையில் 1979ஆம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.
வில்லனாக நடித்து பிரபலமான விஜயகாந்த் 150கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1984ஆம் ஆண்டு மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களின் நடித்து சினிமா துறையில் வரலாற்று சாதனை படைத்தார். இவருடைய படங்களுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
கேப்டன் என்ற அடைமொழிக்கு பின்னால் இருக்கும் சுவாரசியமான கதை இதுதான்..
இவ்வாறு விஜயகாந்த் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சினிமாவில் ஏராளமான அவமானங்களையும், தடைகளையும் சந்தித்தார். 1999ஆம் ஆண்டு நடிகர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் கிடந்த நடிகர் சங்க கடனை அடைத்தார். அதற்காக சிங்கப்பூர், மலேசியா போன்ற தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களை அழைத்துச் சென்று நட்சத்திர கலை விழாக்கள் நடத்தினார்.
மேலும் தன்னை போல் யாரும் சினிமாவில் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக சினிமாவிற்கு அறிமுகமாகும் இயக்குனர்கள், நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். இதனை அடுத்து கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்து பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.