அடிச்சிக்கூட கேப்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க.. இந்த காமெடிக்கு பின்னால் இருக்கும் நகைச்சுவை நடிகரின் சோகம்.!

vadivelu 1
vadivelu 1

90 காலகட்டத்தில் ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் நடிகர் வடிவேலு. தற்பொழுது வரையிலும் இவருடைய காமெடிகள், மீம்ஸ் போன்றவை சோசியல் மீடியாவில் வைரலாக உள்ளது. சினிமாவில் கலக்கி வந்த இவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் நடித்திருந்த நிலையில் இந்து திரைப்படம் வெளியாகி படும் தோல்வினை சந்தித்தது. இவ்வாறு சமீப காலங்களாக இவருடைய நடிப்பில் வெளிவரும் படங்கள் சொல்லும் அளவிற்கு இல்லை என்றாலும் இவர் அந்த காலகட்டத்தில் நகைச்சுவை நடிகராக கலக்கிய பல திரைப்பட வசனங்கள் தற்பொழுது வரையிலும் பேமஸ்சாக இருந்து வருகிறது.

அந்த வகையில் ஒரு வசனம் தான் அடிச்சு கூட கேப்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க என்ற வசனம். இந்த வசனம் ‘கண்ணும் கண்ணும்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த நிலையில் இதில் போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓடும் போண்டாமணி வடிவேலு உட்கார்ந்து இருக்கும் நேரத்தில் திடீரென தண்ணீர்க்கடியில் இருந்து வருவார் எனவே இதனை பார்த்தவுடன் வடிவேலு அரண்டு விடுவார் பிறகு போண்டாமணி என்னைய போலீஸ் தேடிக்கிட்டு இருக்கு அவங்க வந்து கேட்பாங்க எதுவும் சொல்லிடாதீங்க அடிச்சு கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க எனக்கூறி விட்டு ஓடுவார்.

ஆனால் என்ன விஷயம் என சொல்ல மாட்டார் எனவே போலீசார் வந்து வடிவேலுடம் போண்டாமணி குறித்து விசாரிக்க அவரும் அடிச்சு கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க என சொன்னதாக கூறுகிறார். எனவே வடிவேல் போலீசை கடுப்பேற்ற ஒரு கட்டத்தில் அனைவரும் சேர்ந்து வடிவேலுவை அடித்து விடுவார்கள் எனவே இந்த நகைச்சுவை காட்சி தற்பொழுது வரையிலும் சிரிப்பை வர வைக்கும்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த காட்சி உருவாகுவதற்கு முக்கிய காரணம் இருக்கிறதாம் அதாவது சமீப பேட்டி ஒன்றில் போண்டா பணி அது பற்றிய தகவலை பகிர்ந்துக் கொண்டார். அதாவது இந்த காட்சியில் அல்வா வாசுவை தான் நடிக்க வைக்க வேண்டும் என வடிவேலு கூறினாராம். ஆனால் இயக்குனர் தான் போண்டாமணி நடித்தால் தான் சிறப்பாக இருக்கும் என்று கூறினாராம் இதனால் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் நடந்த நிலையில் ஒரு வழியாக போண்டா மணியை நடிக்க வைப்பதற்கு ஒப்புக்கொண்டு உள்ளார் வடிவேலு எனவே அதன் பிறகு தான் போண்டா மணி இந்த காமெடி காட்சியில் நடித்துள்ளார்.