தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படம் விஜய் மற்றும் விஜய்சேதுபதி கூட்டணியில் வெளிவந்ததால் இருதரப்பு ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து வசூல் வேட்டையை அடைந்தது. இதனை திரையுலகினர், ரசிகர்கள் இன்று அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.
இப்படத்தில் இடம்பெற்றிருந்த வாத்தி கம்மிங் பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது. இப்படமும் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்ப்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
அதுமட்டுமல்லாமல் இப்பாடலுக்கு பலர் டான்ஸ் ஆடி வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு வைரலாகி வந்தார்கள். இப்பொழுதும் பல நடனமாடி தான் வருகிறார்கள். அந்த வகையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீரர்கள் இணைந்து இப்பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்கள்.
இதற்கு முன்பே இந்திய கிரிக்கெட் வீரர்கள் டான்ஸ் ஆடி வெளியிட்டு இருந்தார்கள் அந்த வகையில் அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று கூறுவது போல் மகளிர் அணியினரும் நடனமாடி வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
அதில் இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வீரரான வேதா கிருஷ்ணமூர்த்தி, திவ்யா, வனிதா,ஆகான்ஷா உள்ளிட்ட வீரர்கள் இணைந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்கள்.அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.