இளம் படையை கொண்டு நியூசிலாந்து அணியை தோற்கடிக்க ரெடியான இந்திய அணி.! மாஸ் காட்டும் கேப்டன் ரோஹித் ஷர்மா.

rohit
rohit

நியூசிலாந்து இடையிலான 20 ஓவர் போட்டி நாளை நடைபெற இருக்கிறது முதல் போடி ஜெய்ப்பூரில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்க இருக்கிறது இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்க இருக்கிறது இதற்காக இரண்டு அணி வீரர்களும் தனது சிறந்த பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக இந்திய அணி உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பைக் கூட நெருங்காமல் வெளியேறியது இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை சந்தித்தது இதனால் ரசிகர்களுக்கு நல்ல மருந்து போடவும் கிரிக்கெட் வீரர்கள் ஒரு வெற்றியை பெறவும் தற்போது ஆயத்தமாக இருக்கின்றனர்.

இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இந்திய அணியின்  புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செய்யப்பட இருக்கிறார். 20 ஓவர் கிரிக்கெட் பார்மட்டில் ரோஹித் சர்மா கேப்டனாகவும் செயல்பட இருக்கின்றனர்.

விராட் கோலி போன்ற டாப் வீரர்களுக்கு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது அடுத்து இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளது இந்திய அணி இந்த முறை இளம் அணிதான் நியூசிலாந்தை தவிடு பொடியாக்க ரெடியாக இருக்கிறது. ரோகித் சர்மா, கேஎல் ராகுல் போன்ற அனுபவ வீரர்கள் இருந்தாலும் அவர்களைப் பின் தொடர்ந்து வருபவர்கள் அனைவருமே இளம் வீரர்கள் என்பதால் போட்டி நிச்சயம் நல்லதொரு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இளம் வீரர்கள் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியில் இடம்பிடிக்க ரெடியாக இருக்கின்றனர் அந்த வகையில் இந்திய அணியில் தற்போது ரோகித்சர்மா, ராகுல், கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், அக்ஷர் பட்டேல், அஸ்வின், தீபக் சஹர், ஹர்ஷா பட்டேல், ஆவேஷ் கான், முகமது சிராஜ் ஆகியோர்கள் இந்திய அணியில் தேர்வாகி உள்ளனர்.

ஆனால் பதினொரு பெயரை யார் எடுப்பது என்பது மட்டும் தற்போது இந்திய அணியில் மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. எது எப்படியோ சிறந்த பதினொரு வீரர்களுடன் களத்தில் இறங்கி நியூசிலாந்து அணியை அடித்து நொறுக்க ரெடியாக இருப்பதாக தெரியவருகிறது.