Indian Railway Ministry announces against passenger service : இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது, அதனால் 144 தடை விதிக்கப்பட்ட கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் மே 17 வரை நாடு தழுவிய ஊரடங்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது பயணிகள் ரயில் சேவைகள் இன்னும் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
இந்திய ரயில்வே அறிவித்துள்ள செய்திகளில் கொரோனாவை அடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக இந்தியரயில்வே வில் உள்ள பயணிகள் ரயில் சேவைகள் அனைத்தும் மே 17 வரை நிறுத்தப்படும் என முடிவு செய்துள்ளது,
அதுமட்டுமில்லாமல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் மாணவர்கள் வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கும் பிற நபர்களின் நடமாட்டம், ஆகியவை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதலின்படி மாநில அரசுகள் தேவைக்கேற்றவாறு சிறப்பு ரயில்கள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்கள்.
அதேபோல் சரக்கு ரயில் மற்றும் பார்சல் ரயில் வழக்கம் போல் தொடரும் எனவும் கூறியுள்ளார்கள் நாட்டில் கொரோனா தீவிரம் அடைந்ததால் ரயில்வே துறை மார்ச் 24 அன்று வரை அனைத்து பயணிகள் சேவைகளும் நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தது.
ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய இரண்டாம் கட்ட ஊரடங்கு அறிவித்துள்ளதால் மே 3 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு முழு பணமும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் முன்பதிவு செய்தவர்கள் ஜூலை 31 வரை பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.