சங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் திரைப்படத்தில் முதன்முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? பல வருடம் கழித்து வெளியாகிய ரகசியம்.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அந்தஸ்தில் இருப்பவர் இயக்குனர் சங்கர், இவர் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது இயக்குனர் சங்கர் அவர்கள் கமலஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே 28 வருடத்திற்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் வெளியாகிய இந்தியன் திரைப்படத்தில் இரண்டாவது பாகமாக தான் இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது கமலஹாசன் இந்தியன் திரைப்படத்தில் அப்பா மகன் என்று இரண்டு ரோட்களில் அசத்தலாக நடித்திருந்தார் இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்திய 2 திரைப்படம் மீண்டும் இந்தியன் தாத்தாவை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்தார்கள்.

படத்திற்கு பெரிதாக வரவேற்பு வராத நிலையில் மூன்று மணி நேரமாக இருந்த திரைப்படத்தின் ரன் டைம் 20 நிமிடங்கள் குறைக்க சங்கர் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தியன் படத்தின் கதையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்காக எழுதப்பட்டது என்பது என்பது தெரிய வந்துள்ளது. சங்கர் காதலன் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பொழுது ரஜினிகாந்த் அவர்கள் சங்கரை அழைத்து தனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்கள் என கூறியுள்ளார் அப்பொழுது சங்கர் சொன்ன கதை தான் இந்தியன்.

ஆரம்பத்தில் இந்தியன் திரைப்படத்திற்கு பெரிய மனுஷன் எனக் டைட்டில் வைத்திருந்ததாகவும் ஆனால் ரஜினியிடம் கால்ஷீட் தேதிகள் ஒதுக்க முடியாத நிலையில் அந்தக் கதையை கமலஹாசன் அவர்களுக்கு சங்கர் கூறியுள்ளார். அந்த கதை கமலஹாசனுக்கு பிடித்து போக வேற வழி இல்லாமல் நடிகர் கமலஹாசனை சந்தித்து கதையை கூறியுள்ளார் அதன் பிறகு 1996 இல் கமலஹாசன் நடித்து  திரையரங்கிற்கு வந்து மாபெரும் ஹிட் அடித்தது.