1996 இல் வெளியாகிய இந்தியன் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா.?

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அன்போடு அழைக்கப்படுபவர் இயக்குனர் சங்கர் இவர் உலகநாயகன் கமலஹாசனை வைத்து 1996 ஆம் ஆண்டு இந்தியன் என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் கழித்து இரண்டாவது பாகம் உருவாகி இன்று திரைக்கு வந்துள்ளது அதேபோல் இந்தியன் 2 திரைப்படமும் வெளியாகி மிகப்பெரிய சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்தியன் 2 திரைப்படம் இந்தியன் திரைப்படத்தை போல் வசூலிலும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது அந்த வகையில் 1996 ஆம் ஆண்டு வெளியாகிய இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி உலக அளவில் இந்தியன் திரைப்படம் 61 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது அப்படி இருக்கும் நிலையில் இந்திய அளவில் 53.7 கோடியும் வெளிநாட்டில் 7.76 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 20 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Exit mobile version