இயக்குனர் பிரசாந்த் நீல் நடிகர் யாஷ் – க்கு கேஜிஎஃப் படத்தின் கதையை கூறியுள்ளார் அது அவருக்கு ரொம்பப் பிடித்துப் போகவே இந்த படம் அதிரடியாக உருவானது யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ஆக்சன் சென்டிமெண்ட் கலந்த படமாக இந்த படத்தை எடுத்திருந்தார்.
இந்த படம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது முதல் பாகம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த உடன் இதன் இரண்டாவது பாகத்தை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் கூறினார்கள் அதனால் உடனடியாக கேஜிஎஃப் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டாலும்..
பல்வேறு தடைகளை சந்தித்து ஒரு வழியாக இரண்டு வருடங்கள் கழித்து ஏப்ரல் 14ம் தேதி கோலாகலமாக வெளியான இந்த படம் மக்கள் எதிர்பார்த்தை விட சிறப்பாக இருந்த காரணத்தினால் தற்போது சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. KGF 2 திரைப்படம் இதுவரை சுமார் 1000 கோடியை தொட்டு வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
அதுவும் குறைந்த நாட்களிலேயே ஆயிரம் கோடியை கே ஜி எஃப் 2 திரைப்படம் தொட்டு உள்ளதால் வருகின்ற நாட்களில் இன்னும் அதிக வசூல் செய்து பல்வேறு புதிய சாதனைகளைப் படைக்க இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்திய சினிமா உலகில் ஆயிரம் கோடியை தொட்ட நான்கு திரைப்படங்கள் குறித்து தற்போது விலாவரியாக பார்ப்போம்.
கே ஜி எஃப் 2 படம் வெளியாகி சுமார் 13 நாட்களிலேயே படம் ஆயிரம் கோடியை தொட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி 2 திரைப்படம் வெறும் ஒன்பதே நாட்களில் சுமார் 1000 கோடியைத் தொட்டு புதிய சாதனை படைத்தது.
ராஜமௌலியின் மற்றொரு திரைப்படமான RRR திரைப்படம் மார்ச் 23 ஆம் தேதி வெளியாகியது இந்த திரைப்படம் வெளியாகிய வெறும் 16 நாட்களிலேயே ஆயிரம் கோடியை தொட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன கடைசி இடத்தில் இருப்பது அமீர்கான் நடிப்பில் உருவான தங்கல் திரைப்படம் தான் இந்த திரைப்படம் நூற்று நாற்பத்தி மூன்று நாட்களில் ஆயிரம் கோடியை தொட்டது 70 கோடி பட்ஜெட்டில் உருவான தங்கல் திரைப்படம் கடைசி வரை 2,200 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.