இந்த படத்தின் வசூலை எட்டி கூட பார்க்காமல் திக்குமுக்காடும் இந்திய சினிமா.! டாப் நடிகர்கள் முட்டிகரணம் கூட அடிச்சி பாத்தாச்சி..

சினிமா உலகில் ஆண்டு தோறும் பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்து வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அப்படி ஒரு திரைப்படத்தின் வசூல் மற்றும் இதுவரை எந்த ஒரு  இந்திய சினிமாவும் முறியடிக்க முடியாமல் தடுமாறி வருகிறது.

சினிமாவின் கதை களமும் நன்றாக இருப்பதோடு அதில் நடிப்பவர்கள் அந்த கதைக்கு ஏற்றவாறு புரிந்துவிட்டால் அந்த திரைப்படம் வேறு மொழிகளில் டப் செய்து நல்லதொரு வரவேற்ப்பை பெறும். அந்த வகையில் இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாகி சுமார் இரண்டாயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து இந்திய சினிமாவின் உச்சத்தில் இருப்பது பாகுபலி சீரிஸ்.

இந்த படத்திற்கு பிறகு இந்திய சினிமாவில் கேஜிஎஃப், தங்கல், எம்எஸ் தோனி போன்ற படங்களில் நல்லதொரு வசூலைப் பெற்றாலும் பாகுபலி முதல் பாகத்தின்  வசூல் 700 கோடி இதை கூட தொடமுடியாமல் போனது. இந்த நிலையில் பாகுபலி  இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு நிலவியது இந்த திரைப்படம் வெளியாகி சுமார் 2 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது இந்திய சினிமாவில் சாதனை படைத்தது.

அதன் பிறகு வந்த எந்த ஒரு திரைப்படமும் இதன் பக்கத்தில் கூட நிற்க முடியவில்லை. பாகுபலி திரைப்படத்தை எடுத்த ராஜமவுலி   அடுத்தடுத்த திரைப்படங்களை எடுத்து வந்தாலும்  இந்த திரைப்படத்தின் வசூலை தோற்கடிக்க என்பது கேள்விக்குறிதான்.ஆனால் பாகுபலி படம் வெளிவரும் பொழுது தங்கல் திரைப்படமும் ஓரளவு வசூலை ஈட்டியது.

இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டும் 600 கோடி 500 கோடி வசூல் செய்தாக தகவல் வெளியாகி உள்ளது. பாகுபலி 1, 2 படங்களை வசூலில் தோற்கடிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது இந்தியா சினிமாவில்.