நடிப்பிற்கு பெயர்போன உலகநாயகன் கமலஹாசன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை பிடித்துப் போகவே விக்ரம் திரைப்படத்தில் நடித்தார் இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்து வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியாகயிருக்கிறது.
இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து நடிப்பில் பின்னி பெடலெடுக்கும் பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா போன்ற பல அட்டாக் நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்து அசத்தி உள்ளனர். படம் வெளிவருவதற்கு முன்பாக மக்களை கவர்ந்து இழுக்கும் வகையில் அடுத்த அடுத்த அப்டேட் மற்றும் படம் குறித்தும் கமல் குறித்தும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது சீக்கிரம் விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் வெளிவரும் என படத்தின் ட்ரைலரை வைத்தே ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டனர். இது குறித்து தொடர்ந்து கமல் மற்றும் இயக்குனரிடம் கேட்டு வருகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் 75வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்றது இந்த விழாவில் உலக நாயகன் கமலஹாசன் பங்கேற்ற போது இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது அதை பார்த்த ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்து போனார்கள் மேலும் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கமலஹாசனிடம்..
விக்ரம் 3, இந்தியன் 2 இந்த படங்களில் எது முதலில் வரும் என கேட்டுள்ளனர் அதற்கு பதிலளித்த உலகநாயகன் கமலஹாசன் இந்தியன் 2 திரைப்படம் விரைவில் தொடங்கும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது விக்ரம் 3 படத்தை பற்றி லோகேஷ் கனகராஜ் தான் முடிவு செய்ய வேண்டும் ஏனென்றால் அவர்தான் இந்த படத்தின் இயக்குனர் என கூறியுள்ளார்.