இந்தியன் 2, தேவர்மகன் 2 படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் இணைய ஓகே சொன்ன உலகநாயகன் – கதை எழுத ரெடியான பிரபல இயக்குனர்.!

KAMAL
KAMAL

நடிப்புக்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் தொடர்ந்து பல்வேறு சிறப்பான படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக வலம் வருகிறார். சினிமாவில் கமலஹாசன் நடிப்பைத் தாண்டி படங்களை தயாரிப்பது இயக்குவது பாடல் பாடுவது என பன்முக தன்மை கொண்டவராக விளங்குகிறார்.

கமலஹாசன் ஒரு சில நடிகர்கள் போல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதில் இல்லாமல் தனது படங்களில் வரும் கதாபாத்திரங்களுக்கு முழு ஈடுபாட்டுடன் தன்னை அர்ப்பணித்து நடித்து படத்தை சிறப்பிப்பார் அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் வியந்து பார்க்கும் அளவில் உள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து விக்ரம் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் கடந்த ஜூன் மூன்றாம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளிக் குவித்து வருகிறது படம் வெளிவந்து ஒரு மாதம் முடிவடைவதற்கு உள்ளே 350 கோடி வசூலை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது.

மேலும் 500 கோடி வசூலை தொடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கமலை வைத்து படம் எடுக்க போட்டி போட்டு வருகின்றனர். ஆம் கமலும் விக்ரம் படத்திற்கு பின்பு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் தேவர்மகன்-2 போன்ற இரு படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனிடையே சமீபத்தில் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கமலஹாசனை சந்தித்து வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கலாமா எனக் கேட்டதற்கு கமலும் சரி என சொல்லி உள்ளாராம் அதனால் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்தின் கதையை எழுத ஆரம்பித்து விட்டாராம். இதனிடையே இந்தியன் 2 தேவர்மகன் 2 ஆகிய படத்தின்  படப்பிடிப்புகள் முடிவடைந்த பிறகு வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம் தொடங்கும் என தெரியவருகிறது