கொரோனா மற்றும் ஒரு சில காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியன் 2 திரைப்படம் சமீபத்தில் தொடங்கியுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீட்டை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மேலும் இந்தியன் 2 திரைப்படம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் ஷூட்டிங் தொடங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த வாரம் பாபி சிம்ஹா மற்றும் ஜெயபிரகாஷ் ஆகிய இருவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த வார சூட்டிங் பணிகள் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் பின்னர் இந்தியன் 2 திரைப்படத்திற்காக மேக்கப் கலைஞர்களை சந்திக்க நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அமெரிக்கா சென்று உள்ளார். இவருடைய காட்சிகள் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளது. மேலும் இந்தியன் 2 படத்திற்கான கமலின் லேட்டஸ்ட் லுக் போட்டோ சமீபத்தில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரையறுப்பை பெற்றது.
இந்தியன் 2 திரைப்படத்தின் சூட்டிங் 120 நாட்களில் முடிக்க இயக்குனர் சங்கர் திட்டம் தீட்டி உள்ளார். அதேபோல் சூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இந்தியன் 2 திரைப்படத்திற்காக நடிகர் விவேக் அவர்களின் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டது. ஆனால் விவேக் அவர்கள் இறந்து விட்டதால் அவருடைய காட்சிகள் அனைத்தையும் நீக்கிவிட்டு மலையாள நடிகர் ஒருவரை தேர்வு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தியன் 2 ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங் சென்னை வந்துள்ளார். மேலும் நடிகை ரகுல் பிரீத் சிங் தனது இணையதள பக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்திற்காக இங்கு வந்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்தியன் 2 திரைப்படத்தில் இன்னும் யார் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
மேலும் இந்த வாரம் நடிகை காஜல் அகர்வால் இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக மும்பையில் இருந்து சென்னை வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் கமல்ஹாசனும் அடுத்த வாரம் அமெரிக்காவில் இருந்து சென்னை வரவுள்ளார்.