இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் தேதியை லாக் செய்த படக்குழு – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

indian
indian

சினிமா உலகில் சிறந்த நடிகர் சிறந்த இயக்குனர் உடன் இணையும் பொழுது அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும். அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் மற்றும் சங்கர் இணைந்து பணியாற்றி உள்ள திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக இருந்து வந்துள்ளன  அந்த வகையில் இந்தியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இருவரும் இந்தியன் 2 திரைப்படத்தில் இணைந்தனர்

இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கின் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு அதில் ஒரு சிலர் உயிரிழந்தனர் அதனால் இந்தியன் 2  படம் டிராப்பானது. மீண்டும் தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இல்லாமல் போனதால் படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகர்கள் அனைவரும் அடுத்தடுத்த கால்ஷீட் காரணமாக நடிக்க தொடங்கினார்

அதே போல இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை நம்பி உட்கார வேண்டாம் என நினைத்து தெலுங்கில் ராம்சரனை வைத்து ஒரு புதிய படத்தை எடுத்து வந்தார் இதற்கிடையில் குறிப்பிட்ட நேரத்தில் லைக்கா நிறுவனம் இந்தியன் 2 படத்தை முடித்துவிட வேண்டுமென்று அணுகியது. கோர்ட் தலையிட்டு அனைத்து பிரச்சனைக்கும் முடிவு கட்டியது இந்தியன் 2 திரைப்படத்தினை வருகின்ற ஆகஸ்ட் 24ஆம் தேதி படப்பிடிப்பை நடத்த உள்ளது

ஷங்கரும் தற்போது ரெடியாக இருக்கிறார் கமலும் விக்ரம் படத்தை தொடர்ந்து இந்தியன் 2 படத்தை முடிக்க ரெடியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடக்காது என தெரிய வருகிறது ஏனென்றால் தெலுங்கில் ஷங்கர் ராம்சரண் வைத்து உருவாகி வரும் படத்தை இன்னும் முடிக்காமலேயே ஷங்கர் வைத்துள்ளாராம்

அதனால் இரண்டு பக்கமும் மாறி மாறி படத்தை எடுப்பார் என தெரிய வருகிறது எது எப்படியோ லைக்கா நிறுவனம் இந்த படத்தை நீங்கள் முடித்துக் கொடுத்து விட்டாலே பெரிய விஷயம் என சொல்லி உள்ளதாம். இந்தியன் 2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பிலேயே 70% படப்பிடிப்பு முடிந்துள்ளதாம். இரண்டாவது கட்டமாக இன்னும் 30% படப்பிடிப்பு தான் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.