indian 2 movie shooting wrapped : கமலஹாசன் நடிப்பில் சில வருடங்களாக எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் தான் இந்தியன் 2 இந்த திரைப்படம் இந்தியன் திரைப்படத்தில் இரண்டாவது பாகமாகும் முதல் பாகம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இரண்டாவது பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதேபோல் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் பல அசம்பாவிதங்கள் நடந்தாலும் ஒரு வழியாக படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள் பட குழு.
மேலும் இந்தியன் 2 திரைப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி பாபி சிம்கா காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் என பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மிகவும் பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது இந்த நிலையில் சமீபத்தில் கூட இந்தியன் 2 அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டது இந்த வீடியோ ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அப்படி இருக்கும் நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.
கமலஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தை முடித்துவிட்ட நிலையில் விரைவில் அவர் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியும் முடிவடைய இருக்கிறது அது மட்டும் இல்லாமல் கமலஹாசன் அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது அது மட்டும் இல்லாமல் த்ரிஷாவும் இணைந்துள்ளார்.
இதோ இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்த பிறகு பட குழுவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட கமலஹாசன்.
