உலகநாயகன் கமலஹாசன் தற்பொழுது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்தியன் 2 திரைப்படத்தில் படப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் பணி நடைபெற்றது அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் கம்பி அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் துடிதுடித்து இறந்தனர் இந்த சம்பவம் சினிமா துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியன்-2 படப்பிடிப்புக்காக சென்னை அருகில் உள்ள பூந்தமல்லி நசரத்பேட்டை உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன்கள் மூலம் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்றது அப்போது ராட்சத விளக்குகள் கிரேன் மூலம் பொருத்தப்பட்டது.
அப்பொழுது வெயிட் தாங்காமல் கிரேன் கம்பி அறுந்து விழுந்தது இந்த விபத்தில் உதவி இயக்குனர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் துணை இயக்குனர் கிருஷ்ணா உதவி நடன இயக்குனர் சந்திரன் ஆகியோர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் பத்துக்கும் மேற்பட்ட திரைப்பட கலைஞர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தை பற்றி விசாரித்து வருகிறார்கள்.
இந்த விபத்து பற்றி கமலஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் பேசியதாவது, மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன்.முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது.இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்.
மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன்.
முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது.
இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) February 19, 2020
எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட
அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட
அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்— Kamal Haasan (@ikamalhaasan) February 19, 2020