சமீப காலமாக பிறமொழி நடிகைகள் தான் தமிழ் சினிமாவில் அதிக பட வாய்ப்புகளை அள்ளி ஓடுகின்றனர். அந்த வகையில் நடிகை ரகுல் பிரீத் சிங் சொல்லவே தேவை இல்லை.. முதலில் கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வெற்றி கண்டார் பிறகு தமிழ் சினிமா பக்கம் தாவினார்.
முதலில் அருண் விஜய் உடன் கைகோர்த்து தடையர தாக்க திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு நடிகை ரகுல் பிரீத் சிங் நல்ல கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழில் இவர் கடைசியாக நடித்த என் ஜி கே, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து தற்பொழுது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத் சிங் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தியன் 2 திரைப்படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அது இணைய தளப்பக்கத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. இந்தியன் 2 திரைப்படத்தில் உலக நாயகன் கமலஹாசன் 90 வயது முதியவராக நடித்து வருகிறார். இதற்காக அவருக்கு மேக்கப் போட மட்டுமே குறைந்தது 5 மணி நேரம் ஆகும். நாங்கள் மேக்கப் போடுவதற்கு முன்பாகவே அவர் வந்து மேக்கப் போட்டு கொண்டு ரெடியாகி கொண்டிருப்பார்.
ஷூட்டிங் முடிந்த பிறகு அவர் மேக்கப் கலைக்க மட்டுமே இரண்டு மணி நேரமாகும். ஆனால் அதை ஒரு பெரிய விஷயமாக பொருள்படுத்தாமல் சினிமாவில் ஒரு அங்கமாக இருக்கிறார் நான் அதை வியந்து பார்க்கிறேன் என ரகுல் பிரத் சிங் கூறியுள்ளார் இந்த தகவல் தற்பொழுது வைரல் ஆகிய வருகிறது.