அசந்தா ஆட்டையை போட்டுடுவாங்க போல.! சுதாரித்துக்கொண்ட இந்தியன்-2 படக்குழு.!

indian-2
indian-2

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் பிரம்மாண்ட இயக்குனராகவும் வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர் இவர் தற்பொழுது உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன்2 திரைப்படத்தை இயக்கி வருகிறார், இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

சமீபத்தில்கூட இத்திரைப்படத்தில் ஏற்பட்ட விபத்தால் மூவர் உயிரிழந்தார்கள், அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது அதன்பின்பு கொரோனா  காரணமாக மேலும் படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. விபத்தில் மூன்று பேர் உயிர் இழந்தது மட்டுமல்லாமல் 10 பேர் படுகாயம் அடைந்தார்கள் அதனால் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

படப்பிடிப்பை இப்படித் தள்ளிப் போய்க் கொண்டே இருந்ததால் லைக்கா நிறுவனம் இந்தியன்2 திரைப்படத்தை டிராப் செய்ததாகவும் அதனை சன் பிக்சர் கைப்பற்றியதாகவும் பல வதந்திகள் கிளம்பி விட்டது, இந்த தகவல் தயாரிப்பு நிறுவனத்தின் காதுக்கு போக இப்படியே விட்டால் இந்தியன்2 திரைப்படத்தின் சோலியை  முடித்துவிடுவார்கள் என படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை அரசு துவங்கலாம் என அறிவித்ததும் முதன்முதலில் முந்திக்கொண்டு வேலையை ஆரம்பித்தது இந்தியன்2 திரைப்படம் தான்.

இந்தியன் டு படக்குழு அசந்தால் ஆட்டையை போட்டு விடுவார்கள் என கொஞ்சம் உஷார் ஆகி விட்டார்கள், மேலும் படத்தின் எடிட்டிங் பணிகள் நடந்து வருவதாகவும் அடுத்தகட்ட படப்பிடிப்பு பல்லாவரம் அருகே உள்ள பின்னி மில்லில் நடைபெற இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.