உலக நாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவில் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றிப் படங்கள் தான் அந்த லிஸ்ட்டில் இன்னமும் சில படங்களை சேர்க்க உலகநாயகன் கமலஹாசன்..
வருடத்திற்கு ஒரு படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து இந்தியன் 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங்..
பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சித்தார்த், டெல்லி கணேஷ், சமுத்திரக்கனி என மிகப் பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
எழுத்தாளர் ஜெயமோகன் இந்தியன் 2 திரைப்படத்தின் கதை குறித்து பகிர்ந்து உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால்.. இந்தியன் படத்தைப் போலவே அதன் இரண்டாவது பாகமும் அமைந்திருக்கும் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் தான் முதல் பாகம் இருக்கும் இரண்டாவது பாகமும்..
இதற்கு முந்தைய காலத்தில் தொடங்கி அதன் பின் மீண்டும் இந்தியன் தாத்தா காலத்திற்கு வரும்.. இந்தியன் தாத்தா என்ற கதாபாத்திரத்தில் வரும் சேனாதிபதிக்கும் அவரின் தந்தைக்கும் நடக்கும் சண்டையே இந்த படத்தின் திரைக்கதையாக இருக்கும் என ஜெயமோகன் கூறி இருக்கிறார். இதை அறிந்த ரசிகர்கள் அப்படி என்றால் இந்தியன் 2 திரைப்படம் பிளாக்பஸ்டர் அடிப்பது உறுதி என கூறி கமெண்ட அடித்து வருகின்றனர்.