இந்தியன் 2 திரைப்படத்திற்காக கமல் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா… வாயை பிளந்த கோலிவுட்

பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருப்பவர் இயக்குனர் சங்கர் இவர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் இந்தியன் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தற்பொழுது உருவாகி உள்ளது. இந்த இரண்டாவது பாகம் உருவாகும் பொழுது பல பிரச்சனைகள் வந்தது அதனை எல்லாம் தாண்டி தற்பொழுது பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது.

ஒருவழியாக இந்த திரைப்படம் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாக இருக்கிறது இதனை காண பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தில் கமலஹாசன் அவர்களுடன் இணைந்து காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ் ஜே சூர்யா மறைந்த நடிகர் விவேக், மனோபாலா என பலர் நடித்துள்ளார்கள்.

படத்தின் டீசர் வெளியாகி ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பட குழுவினர்கள் பலரும் முழு வீச்சில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் இந்த நிலையில் கமலஹாசன் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அப்படிதான் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்ததற்காக 150 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.