1996 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் இந்தியன் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது அது மட்டுமே இல்லாமல் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய திரைப்படமாக வெளியாகி வெற்றி பெற்றது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு இந்த திரைப்படத்தின் படைப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென ஏற்பட்ட அசம்பாவிதத்தால் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது அதன் பிறகு நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டிருந்தது இந்தியன் 2 திரைப்படம். தற்பொழுது மீண்டும் படப்பிடிப்பின் பணிகளை மிகவும் தீவிரமாக பார்த்து வருகிறார்கள் பட குழு. ஏற்கனவே ஏற்பட்டசேதாரத்தை பட குழுவால் ஈடுகட்ட முடியவில்லை அதனால் இனிமேல் இதுபோல் சம்பவம் நடக்க கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்திய 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இந்தியன் 2 திரைப்படத்தில் காஜல் அகர்வால் சித்தார்த் ரகுல் ப்ரீத் சிங் பிரியா பவானி சங்கர் டெல்லி கணேஷ் ஜார்ஜ் மரியான் மனோபாலா என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கு அனிருத் மிகவும் பிரமாண்டமாக இசையமைத்து வருகிறார் ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தினை காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் பட முழு வீச்சுடன் படபிடிப்பை நடத்தி வந்தார்கள். தற்பொழுது படபிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட குழு பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி இந்தியன் 2 திரைப்படத்தில் கமலஹாசனுக்கு ஏழு வில்லன்கள் இருக்கிறார்களாம் அந்த வகையில் சமுத்திரகனி பாபி சிம்கா ஜெயப்பிரகாஷ் குரு சோமசுந்தரம் மாரிமுத்து வெண்ணிலா கிஷோர் சிவாஜி குருவாயூர் என ஏழு வில்லன்கள் இந்தியன் 2 திரைப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இந்தியன் 2 திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தனுஷ்கோடி பகுதியில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது அந்த வகையில் பார்த்தால் இந்தியன் தாத்தா சேனாதிபதி பயங்கர ஆக்சன் மோடில் இருப்பார் என்று தகவல் கிடைத்துள்ளது.