விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த இந்தியன் தாத்தா… இந்தியன் 2 திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகிய திரைப்படம் இந்தியன் 2 இந்த திரைப்படம் கடந்த ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது மேலும் இந்த திரைப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியாகியது இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தொடர்ச்சியாக வெளியாகி உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் கமலஹாசன் அவர்களுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், விவேக், மனோபாலா, நெடிமுடி வேணு, அயன் ஜெகன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள் மறைந்த நடிகர் விவேக் மற்றும் மனோபாலா இருவரும் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது.

மேலும் இந்தியன் 2 திரைப்படம் 3 மணி நேரத்திற்கு மேல் ஓடியதால் படத்தின் தோய்வு காரணமாக 20 நிமிடம் குறைக்கப்பட்டது இந்த நிலையில் முதல் நாளில் இந்தியன் 2 திரைப்படம் இந்தியாவில் மூன்று மொழிகளில் சேர்த்து 26 கோடிகள் வசூல் செய்துள்ளதாகவும் இரண்டாவது நாளான நேற்று இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 17 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.

இரண்டாவது நாளில் தமிழில் மட்டும் 13 கோடி ரூபாயும், ஹிந்தியில் 1.2 கோடியும், தெலுங்கில் 2.5 கோடியும், வசூல் செய்துள்ளது மொத்தம் இரண்டு நாட்களையும் சேர்த்து 42.3 கோடி ரூபாய் வரை இந்தியன் 2 வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது படத்தின் ரன்னிங் டைம் குறைத்துள்ளதால் படம் விறுவிறுப்பாகவும் ரசிகர்களை கவரும் வகையிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று திரையரங்கிற்கு கூட்டம் கூட்டமாக குடும்பத்தினர் வருவார்கள் என படக்குழு நம்பி வருகிறார்கள்.

Exit mobile version