Indian 2 : நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார் அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் உடன் ஒரு படம், எச் வினோத் உடன் ஒரு படம், மணிரத்தினத்துடன் ஒரு படம்..
இது தவிர பிரபாஸ் நடிப்பில் உருவாக்கி வரும் கல்கி படத்தில் வில்லனாக நடித்த வருகிறார். இப்படி இருக்கின்ற நிலை ஏற்கனவே கிடப்பில் இருந்த இந்தியன் 2 படத்தை தூசு தட்டி அதிலேயும் நடித்து வருகிறார். இந்தியன் படம் மாபெரும் வெற்றி பெற்றது தொடர்ந்து பல வருடங்கள் கழித்து இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது.
லியோ படத்தில் நடிக்க “மேத்யூ தாமஸ்” வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
படத்தில் கமலுடன் இணைந்து ப்ரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங்.. சித்தார்த், மனோபாலா, ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, யோகி பாபு, ஜார்ஜ் மரியன், தம்பி ராமையா, ஜெயபிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் இந்த நிலையில் இந்தியன் 2 படத்தில் இருந்து இன்று மாலை 5: 30 மணிக்கு இந்தியன் 2 INTRO வீடியோ வெளியாகும் என அறிவித்தது அதன்படி வீடியோ வெளியாகி உள்ளது.
கரு கரு கருப்பாயி.. கருப்பு கலர் ட்ரெஸ்ஸில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த வாணி போஜன்
அதில் கமல் எடுத்த உடனேயே ஒரு போன் காலில் எங்கெல்லாம் தப்பு நடக்கிறதோ அங்கே எல்லாம் நான் வருவேன் இந்தியனுக்கு சாவே கிடையாது என பேசுகிறார். அதன் பிறகு வரும் பாடல் மிரட்டலாக இருக்கிறது இதோ நீங்களே பாருங்கள்.