முதல் நாள் வசூலில் விக்ரமிடம் தோற்றுப்போன இந்தியன் 2.. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலையே..

ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் இந்தியன், இந்த  திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அது மட்டும் இல்லாமல் அப்பொழுது காலகட்டத்தில் வசூலில் மாபெரும் வசூல் வேட்டை நடத்தியது.

இந்த நிலையில் மீண்டும் சங்கர் கமலஹாசனை வைத்து பல வருடங்களுக்கு பிறகு  இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் கமல் சித்தார்த், எஸ்.ஜே சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர். என மிகப் பெரிய நட்சத்திரபட்டாலமே நடித்துள்ளார்கள் ஜூலை 13ஆம் தேதி திரையரங்கிற்கு வந்துள்ளது திரைப்படம் தமிழகம் முழுவதும் இந்த திரைப்படம் 500க்கும் மேற்பட்ட திரையரங்கில் ஒளிபரப்பப்பட்டது.

28 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்து இருந்தது ஆனால் இந்தியன் 2 திரைப்படம் வெளியான நாள் முதல் தற்பொழுது வரை கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது இந்தியன் 2  திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டதாக கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் 13 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது இது கமலஹாசனின் முந்தைய திரைப்படமான விக்ரம் திரைப்படத்தின் முதல் நாள் வசூலை விட மிகக் குறைவு ஏனென்றால் விக்ரம் திரைப்படம் 19 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது. அப்படி இருக்கும் நிலையில் இந்தியன் 2 திரைப்படம் முதல் நாளில் 13 கோடி ரூபாய் மட்டுமே தமிழகத்தில் வசூல் செய்துள்ளது.