இந்தியன் 2 பட ஷூட்டிங் மீண்டும் ஆரம்பம்.? கமல் போட்ட கண்டீசன் வசமாக மாட்டிய இயக்குனர்..

திறமை உள்ள இயக்குனர், நடிகர்கள் கை கோர்க்கும் போது அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் அது போல தமிழ் சினிமாவில் தனது அசாதாரமான நடிப்பை வெளிப்படுத்தி  கமலும், இயக்குனர் ஷங்கர் இணையும் திரைப்படம் ஒவ்வொன்றும் மாபெரும் வரவேற்பை பெறும் என்பது நாம் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.

அது போல தான் இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டம் போட்டது ஆரம்பத்தில் கை கூடினாலும் ஷூட்டிங்கின்போது பல பிரச்சினைகள் ஒவ்வொன்றாக வர தொடங்கியது.

அதனையெல்லாம் தவிர்த்துக் கொண்டே போய்க் கொண்டிருந்த படக்குழுவுக்கு ஒருகட்டத்தில் பேராபத்து நிறைந்ததால் படக்குழு தயாரிப்பாளர்களை விமர்சித்து விட்டு அதிலிருந்து நடிகரும் இயக்குனரும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து தனது மற்ற வேலையை பார்க்க சென்றதால் இந்தியன் 2 படம் இனி வருமா வராதா என்ற நிலைமை எழ தொடங்கியது.

இருப்பினும் லைக்கா நிறுவனம் இந்த படத்திற்காக மிகப்பெரிய ஒரு பட்ஜெட் போட்டு உள்ளதால் இயக்குனர் ஷங்கரை விடாமல் துரத்தியது. ஆரம்பத்தில் விளையாட்டு காட்டிய ஷங்கரை கோர்ட் மூலம் சந்தித்து தற்போது பேச்சுவார்த்தை நடத்துகிறது

முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தாலும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது இந்த நிலையில் கமல் அரசியல் முடித்து விட்டு வருவதாக சொன்னாள் அவரை தற்போது நடிக்க ஓகே என தலையசைத்து உள்ளதால் இயக்குனரை விடாமல் துரத்துகிறது தயாரிப்பு நிறுவனம் தற்போது சங்கரையும் கமலையும் வைத்து ஒரு பேச்சுவார்த்தை நடத்தி விட்டு விரைவில் படத்தை தொடங்க இருக்கிறது.

ஆனால் இதில் கமல் ஒரு கட்டளையை வைத்துள்ளார் இந்த திரைப்படத்தை இந்த ஆண்டிற்குள் எடுத்து முடிக்க வேண்டும் என்பதுதான் அதற்கான கட்டளை. கமல் இவ்வாறு சொல்வதற்கு காரணம் என்றால் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் கமல் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் அடுத்தடுத்து சினிமாவில் தற்போது படங்களில் நடிக்க முயற்சி பெற்றுள்ளதால் வெகு விரைவிலேயே இந்தியன் படத்தை முடித்துவிட்டு வெளியேவரவேண்டும் முடிவெடுத்து உள்ளார்.