உலகநாயகன் கமலஹாசன் தற்பொழுது பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டார் என்பது பலருக்கும் தெரியும் இதனையடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்2 படப்பிடிப்பில் நடித்து வந்தார்.
முதலில் கமல்ஹாசனின் வயதான தோற்றம் சரியாக இல்லை என்று படப்பிடிப்பு நின்றது.அதன்பிறகு படப்பிடிப்பில் கிரேன் சரிந்து ஒரு சிலர் உயிரிழந்ததால் படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டது.
இதனால் இந்தியன் 2 படபிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
மேலும் சங்கர் திரைப்படத்திலிருந்து உலக நாயகன் கமல்ஹாசன் விலகுவதாக தயாரிப்பு நிறுவனத்திற்கு கமல்ஹாசன் கடிதம் அனுப்பினார் என்று ஏற்கனவே ஒரு தகவல் இணையதளத்தில் வெளியானது நாம் பார்த்தோம்.
இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு அடுத்த மாதம் பிப்ரவரியில் படக்குழுவினர்கள் தொடங்க உள்ளார்களாம் அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் கதாநாயகி காஜல் அவர்கள் மற்றும் சித்தார்த் ஆகியோர் நடிக்கும் பட காட்சியை மட்டும் படக்குழுவினர்கள் படமாக்க போகின்றார்களாம்.
மீதி கமல்ஹாசன் நடிக்கும் பட காட்சியை ஒரே கட்டமாக கமல்ஹாசன் நடித்து கொடுப்பதாக தெரிவித்து இருக்கிறார் என்று இந்த தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.