பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் இந்தியன் இந்த படம் அப்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது இதைத்தொடர்ந்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது. அதில் கமலஹாசன், நெடுமுடி, விவேக், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் போன்ற பல நடிகர் நடிகைகளும் நடித்து வந்தனர்.
அப்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக படம் பாதியிலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் பின் கமலும் வெவ்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வந்தார் மற்றும் அதன் பிறகு விக்ரம் எனும் படத்தையும் தயாரித்து நடித்தும் உள்ளார் இந்த படமும் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தியன் 2 படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் படத்தை மீண்டும் கையில் எடுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தன. ஆனால் இந்தியன் 2 படத்தில் நடிக்க முதலில் கமிட்டான அந்த நடிகர் நடிகைகளில் சில தற்போது இல்லை. ஆம் விவேக் நெடுமுடி போன்றவர்கள் உயிரிழந்த நிலையில் அவருக்கு பதில் வேறு சில நடிகர்களை நடிக்க வைக்க வேண்டும்.
இப்படி படத்திற்கு தேவையான நடிகர் நடிகைகளை இயக்குனர் தேர்வு செய்து வந்த நிலையில் தற்போது ஒரு வழியாக இந்தியன் 2 படத்தின் பூஜை மீண்டும் போடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சித்தார்த் போன்ற சிலர் முன்பு நடித்த அதே கதா பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் இன்று நடந்த இந்தியன் 2 படத்தின் பூஜையில் இயக்குனர் ஷங்கர் மற்றும் இந்தியன் 2 பட குழுவில் பணியாற்ற உள்ள பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகின்றன. இந்தியன் 2 படம் எப்பொழுது தொடங்கும் என ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்தனர் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தற்போது இந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது