Indian 2 : இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ள பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது இதனால் இயக்குனர் ஷங்கர் வருத்தத்தில் இருக்கிறார்.
இயக்குனர் சங்கர் அவர்கள் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் கமலஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் பல மடங்கு அதிகரித்துள்ளது ஏனென்றால் சமீப காலமாக இரண்டாம் பாகம் திரைப்படங்கள் ஹிட் அடித்து வருகிறது அந்த வகையில் இந்தியன் முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்ற நிலையில் இந்த இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கும் பணியில் மிகவும் தீவிரமாக இருந்து வருகிறார் சங்கர் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பில் மோசமான சம்பவம் ஒன்று நடைபெற்றது அதாவது நசராத்பேட்டையில் படபிடிப்பின் போது ராட்சச க்ரேன் விழுந்ததில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர், ஆர்ட் உதவியாளர் சந்திரன் என மூன்று பேர் உயிரிழந்தார்கள்.
இது குறித்து வழக்கு தொடர்ந்ததால் பாதியிலேயே படப்பிடிப்பு நின்றது இந்த சம்பவம் மக்கள் மனதில் மறைவதற்குள் அடுத்தடுத்த இரண்டு அதிர்ச்சியான சம்பவங்கள் நடந்தது அதாவது இந்தியன் 2 வில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் விவேக் திடீரென மரணம் அடைந்தார் இது ரசிகர்களுக்கு பெரும் சோக செய்தியாக மாறியது அது மட்டும் இல்லாமல் நெடுமுடி வேணு உடல்நல குறைவால் திடீரென உயிரிழந்தார் இப்படி ஏப்ரல் மாதம் விவேக் அக்டோபர் மாதம் நெடுமுடி வேணு என அடுத்தடுத்த உயிரிழந்த சம்பவம் இந்தியன் டு பட குழுவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியன் டு கதாபாத்திரங்களை திரையில் கொண்டு வர ஷங்கர் திட்டமிட்டுள்ளார் இப்படி இருக்க அடுத்த வருடமே இந்தியன் 2 வில் பெரும் இழப்பு ஏற்பட்டது அதாவது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் மனோபாலா உயிரிழந்தார் இவர் கடந்த மே மாதம் உயிரிழந்தார் இவர் இறந்து 4 மாதங்கள் ஆன நிலையில் தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து அவர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
இப்படி அடுத்தடுத்த சம்பவம் இந்தியன் 2 படப்பிடிப்பு முடிவதற்குள் நடைபெற்று வருகிறது இது ஷங்கருக்கு மிகவும் சவாலாக இருந்து வருகிறது மாரிமுத்து கதாபாத்திரத்தின் சூட்டிங் முடிவடைந்ததா இல்லையா என்பது இதுவரை தெரியவில்லை ஆனால் இந்த கதாபாத்திரத்தில் வேறு யார் நடிக்கப் போகிறார்கள் இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் எந்த அளவு முடிக்கப்பட்டுள்ளது என தெரியவில்லை விரைவில் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் ஒரு சில நெட்டிசன்கள் இந்தியன் 2 ராசியே கிடையாது அடுத்தடுத்து உயிரிழப்பு சம்பவம் நடைபெற்று வருகிறது என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.