இந்தியாவை பொளந்து கட்டி பவுலரிடம் பலப் வாங்கிய நியூஸிலாந்து.! சரியான நேரத்தில் விக்கெட்டை தட்டி தூக்கிய சிராஜ்.! நாங்கலாம் அப்பவே அப்படி…

siraj
siraj

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கோலாகலமாக தொடங்கப்பட்டது இந்த தொடரில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது அதனால் இந்தியா பந்துவீச்சுக்கு தயாரானது இந்த போட்டியின் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. அதாவது நியூஸிலாந்து நாட்டில் நேப்பியர் நகரில் போட்டி தொடங்கியுள்ளது.

முதலில் போட்டி குறித்த நேரத்தில் தொடங்கப்படவில்லை அதற்கு காரணம் மைதானம் கொஞ்சம் ஈரப்பதத்துடன் இருந்ததால்தான் பின்பு மைதானம் ரெடியானதும் போட்டியை தொடங்கினார்கள். முதலில் பேட்டிங் செய்த நியூஸ்லாந்த அணி தொடக்க வீரர்களான ஃபின் ஆலன் மற்றும் டேவன் கான்வே ஆகியோர்கள் இறங்கினார்கள்.

இதில் ஃபின் ஆலன் நான்கு பாலுக்கு 3 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறி கொடுத்தார் இதனைத் தொடர்ந்து இரண்டாவதாக மார்க் சாப்மேன்  12 பாலுக்கு பன்னிரண்டு ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்  இதில் இரண்டு பவுண்டரிகள் அடங்கும் இதனைத் தொடர்ந்து அடுத்ததாக  இறங்கிய பிலிப்ஸ் 15வது ஓவரில்  33 பாலுக்கு 54 ரன்கள் எடுத்து அணிக்கு ரன்களை குவித்தார் பின்பு 15 ஆவது ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இவரைத் தொடர்ந்து டேவன் கான்வே தனது அணிக்கு அணிகள் குவித்து வந்தார் இவர் பதினாறாவது ஓவரில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார் இவர் 49 பாலுக்கு 59 ரன்கள் எடுத்து தனது அணிக்கு அதிக ரன்கள் சேர்த்தார். இவரைத் தொடர்ந்து ஜேம்ஸ் நிசாம்  17 வது ஓவரில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார் இவர் மூன்று பாலுக்கு ஒரு ரன்கள் எடுக்காமல் தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.

அதற்கு அடுத்ததாக  மீச்சேல் மூன்று பாலுக்கு ஒரு ரன்கள்  மட்டுமே எடுத்தார் இவர் 17 வது ஓவரில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். மேலும் 18 வது ஓவரில் வெறும் ஐந்து பாலுக்கு 10 ரன்கள் எடுத்து d Mitchell தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இப்படி தொடர்ந்து நியூசிலாந்த் அணி அடுத்த அடுத்த விக்கெட்களை பறிகொடுத்து வருகிறது.

இதில் புவனேஸ்வர் குமார்  நான்கு ஓவரில் 35 ரன்களை கொடுத்துள்ளார் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. அடுத்ததாக அர்ஸ்தீப் நான்கு ஓவர் முடிவில் 37 ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அதேபோல் சிராஜ் 4 ஓவர் முடிவில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அதேபோல் தீபக் ஒரு ஓவரில் மூன்று ரண்களும் சமையல் மூன்று ஓவரில் 35 ரங்களும் கொடுத்துள்ளார்கள் இவர்கள் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை அதேபோல் ஹர்ஷல் பட்டேல்  3.4  ஓவருக்கு 28 ரன்கள் கொடுத்துள்ளார் கடைசி விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்த நிலையில் நியூசிலாந்து அணி 19.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இறந்து 160 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து அணி எடுத்துள்ளது. இந்த நிலையில் 161 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்க இருக்கிறது.