விஜய் இப்படி பட்டவர் தான் உண்மையை போட்டு உடைத்த இந்துஜா.!

vijay-sindhuja
vijay-sindhuja

சில நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமாகி ஒரு சில படங்களிலேயே பிரபலம் அடைந்து விடுவார்கள். அந்தவகையில் மேயாதமான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனுக்கு தங்கையாக நடித்து இருந்தவர் தான் நடிகை இந்துஜா.

இவர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இத்திரைப்படத்தின் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து அஜீத் அட்லி கூட்டணியில் வெளிவந்த திகில் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இத்திரைப்படத்தில் கால்பந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் பெண்களில் இவரும் ஒருவராக நடித்திருந்தார்.

இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு கதாநாயகியாக நடிக்க பல படங்களில் வாய்ப்பு குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்துஜா சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். அதோடு ரசிகர்களுடன் லைவ் சேட்டில் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் ரசிகர் ஒருவர் தளபதி விஜயை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு இந்துஜா நல்ல மனிதர்களுக்கு உதாரணம் தளபதி விஜய் என்று கூறலாம். அதோடு மனித நேயத்திற்கும், அளவில்லா திறமைகளுக்கும் உதாரணமாக திகழ்கிறார் என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த கேள்வியாக உங்கள் வாழ்க்கையில் எது சிறப்பான தருணம் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார் மேயாத மான் திரைப்படம் என்று கூறியுள்ளார்.