வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 2020திற்கான சுதந்திர தினவிழா நடைபெற உள்ள நிலையில் சுதந்திர தினத்தை எப்படி கொண்டாட வேண்டும் என்று சில முறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா முன்கல பணியாளர்களை சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்று அறிவித்துள்ளது.
அந்த வகையில் சுதந்திர தின விழா டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கொடி ஏற்றும் பொழுது குறைந்த அளவு பார்வையாளர்கள் இருக்கலாம் என்றும் பிரதமர் கொடியேற்றும் போது விழாவை அனைவரும் இணையதளத்தின் வாயிலாக பார்ப்பதற்காக ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மாநிலங்களில் நடைபெறும் விழாக்களில் பெரும்பாலும் தவிர்க்க வேண்டும், குறைந்த அளவு பார்வையாளர்களை மட்டுமே வைத்து கொண்டாட வேண்டுமென்றும், முக கவசம் அணிந்து இருப்பதுடன் தனி மனித இடைவேளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதை பலரும் கடைபிடிப்பர்களா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.