இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற தொடர்களை தோற்றது அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி உடன் 20 ஓவர் கோப்பை கைப்பற்றினாலும் ஒரு நாள் தொடரை தோற்றது இதனைத் தொடர்ந்து இந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.
இதில் எந்தெந்த சீனியர் வீரர்கள் இடம் பெற்று இருக்கின்றனர் யார் யார் விலகி இருக்கின்றனர் என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஓய்வு அறிவிக்கப்பட்ட சீனியர் வீரர்கள் பலருக்கு இந்த தொடரில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது அந்த வகையில் இந்த பங்களாதேஷ் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது ஷமி ஆகியவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதே வேளையில் சூரிய குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார் போன்றவர்கள் இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தொடரிலாவது ரவீந்திர ஜடேஜா களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காயம் குணமடைய இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்பதால் அவர் இந்த தொடரிலும் விளையாடவில்லை.
மேலும் இந்திய அணியின் வேகப்பந்து பேச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இந்த தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பங்களாதேஷ் எதிராக விளையாட இருக்கும் 17 பேர்கள் யார் யார் என்பது குறித்து பார்ப்போம்..
கேப்டன் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், ஸ்ரீகார் தவான், விராட் கோலி, படித்தார், ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பண்ட், இஷான் கிஷன், சபாஷ் அகமது, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், முஹம்மது ஷமி, முகமது சிராஜ், தீபக் சஹர், குல்தீப் சென் போன்றவர்கள் இடம்பெற்று உள்ளனர்.