10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை அளித்திருக்கும் நிலையில் அது எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் முதன்முறையாக 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவர் மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினார்.
எனவே இதனுடைய விழா சென்னையின் நேற்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இந்த விழாவில் மொத்தம் 1339 மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர். மேலும் இவர்களுடன் பெற்றோர்களும் வந்திருந்த நிலையில் அனைவருக்கும் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேலைகளும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை 10:30 மணி அளவில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இரவு 11:45 மணி வரை நடைபெற்றது. சுமார் 13 மணி நேரம் இந்நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் முழுமையாக நடிகர் விஜய் மேடையிலேயே நின்று கொண்டு மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கியதோடு மட்டுமல்லாமல் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
இவ்வாறு இந்நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் மொத்தம் ரூபாய் 2 கோடி வரை செலவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சி நடைபெற்ற ஆர்.கே கன்வென்ஷன் சென்டருக்காக வாடகை மட்டும் ஒரு நாளைக்கு 40 லட்சம் வழங்கப்பட்டதாம் அது போக சாப்பாடு செலவு, வந்திருந்த மாணவ மாணவிகள் தங்கும் வசதி அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சி திட்டமிட்டதை விட இரவு வரை சென்றதால் இரவு உணவும் அனைவருக்கும் பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் இரண்டு கோடிக்கு மேல் செலவாகி இருக்கும் என கூறப்படுகிறது. இதில் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்து சாதித்த மாணவியின் நந்தினிக்கு மட்டும் வைர நெக்லஸ் ஒன்றை பரிசாக வழங்கி இருந்தார். அந்த நெக்லஸின் மதிப்பு ரூபாய் 10 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இதனைத் தவிர மொத்தம் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட 1339 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூபாய் 5000 வீதம் மொத்தம் 66 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாம். இதில் மூன்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டும் ரூபாய் 25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.