ஒரே நேரத்தில் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் கால் வைத்துக் கொண்டு வலம் வருபவர் தான் உதயநிதி ஸ்டாலின் இவர் தமிழ் சினிமாவில் குருவி என்ற விஜய் திரைப்படத்தை தயாரித்து அதன் மூலம் தயாரிப்பாளராக திரைத்துறையில் அறிமுகமானவர் இதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் இவர் கதாநாயகனாகவும் நடித்து ரசிகர் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
அந்த வகையில் இவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் ரசிகர் மத்தியில் இவருக்கென ஒரு இடமும் கிடைக்க ஆரம்பித்தது அந்த வகையில் இவர் சந்தானத்துடன் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வழி வகுத்து கொடுத்தது.
ஆனால் நாளடைவில் அவர் நடிக்கும் திரைப்படங்கள் எண்ணிக்கை அதிகமானாலும் எந்த ஒரு திரைப்படங்களும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஹிட்டுக் கொடுக்கவில்லை இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் மனிதன் மற்றும் சைக்கோ ஆகிய திரைப்படங்கள் வெளியாகிய நிலையில் தான் நடிக்க போகும் மாமன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பு பயணத்தை முடித்துக் கொள்ளப் போவதாக அவர் கூறியிருந்தார்.
மேலும் அதன் பிறகாக முழுமையாக அரசியல்வாதியாக வலம் வரப்போகிறேன் என்று கூறியிருந்தார் இவரை போலவே இவருடைய மகன் இன்பன் சிறந்த கால்பந்து வீரர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் பிரபல கால் பந்து டீம் ஒன்றில் உதயநிதி மகன் இன்பன் தேர்வாகியது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் மேலும் இதற்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.
இன் நிலையில் இன்பன் அவருடைய தோழியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வந்தன இதனை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம் சமூகவலைதல பக்கத்தில் ஒரு பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார் அதில் அவர் கூறியது என்னவென்றால் அண்ணாமலை டீம் ஸ்டாலின் மகனின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை அவமானப்படுத்தி வருகிறார் என்று குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
மேலும் இப்படி நடக்கு பட்சத்தில் அண்ணாமலையின் தலைமையின் கீழ் பெண்கள் எப்படி பாதுகாக்கப்படுகிறார் என்பதை நீங்களே பாருங்கள் அது மட்டும் இல்லாமல் இப்படிப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதன் மூலமாக அந்த பெண்ணின் பின்விளைவை பற்றி யோசிக்காத அண்ணாமலை இப்படி ஒரு செயலை செய்வதா என மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கி உள்ளார்.
பொதுவாக ஒருவரை எப்படி தனிப்பட்ட முறையில் தாக்குவது இவை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை அந்த வகையில் அண்ணாமலை அவர்கள் அரசியல் ரீதியாக எப்படி ஒருவரை தாக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என்று காயத்ரி ரகுராம் பதிவு சமூக வலைதள பக்கத்தில் மிகப்பெரிய சர்ச்சை உருவாக்கி உள்ளது.