தன்னுடைய அழகான புன்னகையின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் பிரபல முன்னணி நடிகை இவர் தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றது மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் அவர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய திருமணம் நடந்த முடிந்த கையோடு தன்னுடைய சினிமா வாழ்க்கையையும் கைகழுவி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் அதன்காரணமாக தற்போது பல்வேறு முயற்சிகளை செய்து வருவது மட்டுமில்லாமல் பல தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது திருமணம் ஆனாலும் பரவாயில்லை நான் கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என நமது நடிகை அடம்பிடித்து வருகிறாராம். அதேபோல நமது நடிகை திரைப்படத்தில் அம்மா அண்ணி அக்கா போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்க தயக்கம் தெரிவித்து வருகிறாராம்.
அந்தவகையில் தயாரிப்பாளர்கள் தங்களுடைய கதைகளில் பல மாற்றங்களை கொடுத்து அந்த நடிகையை சம்மதம் தெரிவிக்க வைக்கலாமென அயராது போராடி வருகிறார்களாம். அந்தவகையில் பல முன்னணி நடிகைகள் மார்க்கெட் விட்டு விட்டு தற்போது சொந்த தயாரிப்பில் திரைப்படம் நடித்து மார்க்கெட்டை பிடிக்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் மார்க்கெட்டை பிடிக்க முடியாமல் பல நடிகைகள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் வகையில் தன்னுடைய நிலைமையும் அதே போல் ஆகிவிடுமோ என்ற பதட்டம் நமது நடிகைக்கும் இருக்குது போல. ஆனாலும் நமது நடிகையை ரசிகர்கள் திரையில் பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆகையால் இவருடைய வயதுக்கு ஏற்றவாறு கதையை தயார் செய்து வருகிறார்களாம் தயாரிப்பாளர்கள்.