மாஸ்டர் திரைப்படத்தில் பவானி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா!! ஆத்தாடி இந்த கொடூர வில்லனா.

Master-Teaser-Out-Thalapathy-Vijay
Master-Teaser-Out-Thalapathy-Vijay

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ் இவரது இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி வில்லனாகவும் மாளவிகா மோகனன் ஹீரோயினாகவும் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் கடந்த ஆறு மாதமாக திரைக்கு வராமல் தடுமாறிக் கொண்டே இருந்தது என்ன நடந்தாலும் பரவாயில்லை என ஒரு முடிவாக பொங்கல் தின சிறப்புத் திரைப்படமாக திரையரங்கில் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது மட்டுமில்லாமல் விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

மேலும் மாஸ்டர் திரைப்படம் நகரப்புறங்களில் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது தான் அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய்சேதுபதியின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்து விட்டது.

தற்பொழுது விஜய் சேதுபதிக்கு தெலுங்கு திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது அதுமட்டுமில்லாமல் குட்டி பவானி ஆக நடித்த மாஸ்டர் மகேந்திரன் என்ற நடிகருக்கு முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு கிடைத்து வருகிறது.

இந்த பவானி கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் தானாம். இவர்  பாலா இயக்கிய தாரை தப்பட்டை திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். தற்பொழுது வெளியாகும் கிராமப்புறத் கதை உள்ள திரைப்படத்திற்கு வில்லனாக நடிப்பது ஆர்கே சுரேஷ் தான்.

அந்த வகையில் பவானி கதாபாத்திரத்தில் ஆர்கே சுரேஷ் நடித்திருந்தால் படம் வேற லெவல் இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.