நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 65வது திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது தாறுமாறாக எகிறி உள்ளது. காரணம் இந்த படக்குழு உடனுக்குடனே அப்டேட்டை வெளியிட்டு வருவதால் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகவே பீஸ்ட் படம் இருந்து வருகிறது.
பீஸ்ட் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் எடுக்கப்படவுள்ளது. இதற்காக பூஜா ஹெக்டே ஜூலை ஒன்றாம் தேதியே சென்னை வர உள்ளார்.
இந்த படத்தில் நடிக்கின்ற முக்கிய பிரபலங்கள் கமிட்டாகி ரெடியாக இருக்கின்றனர் இப்படி இருக்க ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது பீஸ்ட் படத்தில் விஜய்க்கு பிரண்டாக யோகி பாபு கமிட்டாகி படம் முழுக்க நடிக்கவுள்ளாராம்.
இதனை தளபதி மற்றும் யோகி பாபு ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர் மேலும் இந்த படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர் பார்த்து காத்து கிடக்கின்றனர்.