வானொலி மூலமாக பிரபலமானவர் தான் ஆர்ஜே பாலாஜி இவர் வானொலியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது மட்டுமில்லாமல் இதைத்தொடர்ந்து சினிமாவிலும் பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இவர் கதாநாயகனாகவும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் இவர் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம் எல்கேஜி திரைப்படம் ஆகும் இதில் மாபெரும் வெற்றியை கண்ட நமது ஆர்ஜே பாலாஜி அதன் பிறகு நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தையும் இயக்கி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.
இதுவரை இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வீட்ல விசேஷங்க என்ற திரைப்படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி வருவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தினை போனிகபூர் அவர்கள்தான் தயாரித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் பாலாஜி நான் நடித்து வருகிறாராம்.
மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் வருகின்ற ஜூன் மாதம் 17ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என பட குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள் இந்நிலையில் இந்த திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமிபத்தில் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது.
அந்தவகையில் ஆர்ஜே பாலாஜி அவர்கள் பெண்களை மோசமாக சித்தரித்து திரைப்படங்களை பற்றி பேசியுள்ளார் அது ரஜினியின் படையப்பா மற்றும் மன்னன் ஆகிய படங்கள் பெண்களை தப்பாக காட்டி உள்ளார்கள் என கூறி உள்ளார் மேலும் இதனால்தான் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சமூகத்தில் வேற்றுமை ஏற்பட்டது எனவும் கூறியுள்ளார்.
அந்தவகையில் படையப்பா திரைப்படத்தில் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை நல்ல பெண் என்றும் வெளிநாட்டில் படித்து வந்த பெண்ணை கெட்டவனாகவும் காட்டியிருப்பார்கள் அதேபோல மன்னன் படத்திலும் வீட்டில் அடக்க ஒடுக்கமாக காப்பி போட்டுக் கொடுக்கிற குஷ்புவை நல்ல பெண் என்றும் படிச்சிட்டு கம்பெனி நடத்துற விஜயசாந்தி கெட்டவனாகவும் காட்டியிருப்பார்கள்.
என்று ஆர் ஜே பாலாஜி வேற்றுமை படுத்தி பேசியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Good one.. College மாதிரி இடங்கள்ல நிச்சயம் பேசவேண்டிய விஷயம் இன்னைக்கு இதுதான்..@RJ_Balaji 👏👏👏 pic.twitter.com/xjXRcXskB1
— தோழர் ஆதி™ 😎🔥 (@RjAadhi2point0) May 20, 2022