இந்திய அணி இலங்கை அணி உடனான T20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இதனால் இளம் இந்திய வீரர்கள் 20 பேர் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் இளம் வீரர் ஒருவருக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அன்சுமன் கெய்க்வாட் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இந்த போட்டிகளில் துவக்க வீரராக விளையாட இருக்கும் 21 வயதான பிரிதிவ் ஷாவுக்கு தனது சிறிய கிரிக்கெட் கேரியரில் பெரிய கவனத்தை ஈர்த்தவர் இந்த இலங்கை தொடரில் 6 போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எடுத்த உடனே அதிரடியாக விளையாடும் இவருக்கு அதிக திறமைகள் இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று இருப்பினும் கடந்த ஓரிரு வருடங்களாக அவர் மோசமான பார்மில் இருக்கிறார்.
எட்டு மாதங்களாக கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்டார் அதன் பிறகு சச்சின் மற்றும் மும்பை பயிற்சி பிரவீன் ஆம்பிரே ஆகியோருடைய உதவியை பெற்றார்.அதன் மூலம் தன்னைத் தானே மாற்றிக் கொண்டு பலமாக திரும்பியுள்ளார் இந்த நிலையில் பிரதிவ் ஷா குறித்து முன்னாள் பயிற்சியாளர் கூறுகையில் ஷா ஒரு திறமையான வீரர் எப்பொழுது வேண்டுமானாலும் ரன் குவிக்க முடியும்.
அணிக்காக விளையாடும் ஆர்வமும் திறமையும் அவரிடம் இருக்கிறது. தேர்வான பிறகு தன்னை தக்க வைத்துக்கொள்ள மறந்துவிட்டார். அவரிடம் நம்பிக்கை இருக்கலாம் ஆனால் ஓவர் கான்ஃபிடன்ஸ் அல்லது ஆக்ரோஷம் ஆகியவை இருக்கக் கூடாது இந்த சில காரணத்தினால் தான் அவருக்கு சறுக்கல் ஏற்பட்டு உள்ளது.
இந்திய அணியின் சிறந்த வீரர்களை பார்த்தால் டெண்டுல்கர், டிராவிட், விஸ்வநாத் போன்ற தன்னடக்கம் கொண்டவர்கள் மிகவும் ஒழுக்கமாக நடந்து கொள்வார் அதனாலேயே அவர்கள் இன்றளவும் சிறந்த வீரர்களாக பார்க்கப்படுகின்றன அவர்களை பின்பற்றி ப்ரிதிவ் ஷாவும் நடந்து கொள்ள வேண்டுமென தனது விருப்பத்தைக் கூறினார்.