முதல் வாரத்தில் படுதோல்வி.. இரண்டாவது வாரத்தில் மெகா ஹிட்டான அஜித் படம்.! இயக்குனர் பட்ட கஷ்டம் இருக்கே..

Ajith
Ajith

Ajith : எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் போராடி வளர்ந்தவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு ஹிட் அடித்ததை தொடர்ந்து அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகும் என பேச்சுக்கள் வெளி வருகின்றன. இந்த நிலையில் அஜித் நடித்த வாலி திரைப்படம் குறித்து இயக்குனர் எஸ் ஜே சூர்யா பேசியது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அஜித், சிம்ரன், ஜோதிகா, விவேக் ஆகியவர்கள் நடிப்பில் வெளியானது.

தொழிலாளர்களின் வேண்டுகோளை ஏற்று ஆட்டோக்காரனாக மாறிய லெஜெண்ட் சரவணன் – வைரலாகும் வீடியோ

இதில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் குறிப்பாக  வில்லனாக சம்பவம் பண்ணி இருப்பார் காலங்கள் கடந்த பிறகும் அந்த கதாபாத்திரம் தனியாக பேசப்பட்டு வருகிறது. எஸ்.ஜே. சூர்யா பேட்டியில் சொன்னது என்னவென்றால்.. படம் ரிலீஸ் ஆனா முதல் வாரம் பெரிய அளவில் ரீச் ஆகவே இல்லை..  அந்த சமயத்தில் சோசியல் மீடியா எதுவுமே இல்லாத காலகட்டம் என்பதால் படத்திற்கான பாசிட்டிவ் விமர்சனங்கள் வராமலே போனது.

இதனால் எஸ் ஜே சூர்யா ரூமுக்கு போய் 6 வருட உழைப்பு வீணாய் போய்விட்டது என சொல்லி அழுது இருக்கிறார். அடுத்த நாள் காலையில் தஞ்சாவூர் சென்று அங்கிருந்து வேளாங்கண்ணிக்கு நடந்தே செல்ல திட்டமிட்டு இருந்தார். சொன்னது போலவே நேர்த்திக்கடனை செய்து முடிக்க வேண்டும் என கிளம்பினாராம் அவர் போன பிறகு படம் மெல்ல மெல்ல படம் பிக்கப் ஆகிறது பாடல் எல்லாம் பெரிய ஹிட்..

Baakiyalakshmi : குழந்தையை மறைய வைத்துவிட்டு எல்லோரையும் கதற விட்ட மாலினி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

அஜித்தின் வில்லத்தனம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படுகிறது என தகவல்கள் வெளிவந்தன. அப்பொழுது எஸ் ஜே சூர்யாவை கண்ட ஒரு சிறுவன் அவரிடம் கையெழுத்து வாங்கினாராம் அப்பொழுது தான் தான் ஒரு இயக்குனராக ஜெயித்து விட்டோம் என அந்த பேட்டியில் கூறினார்.