தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றவர் பி வாசு சமீபகாலமாக இவர் படங்களை இயக்கவில்லை என்றாலும் படத்திற்கான மவுசு இன்று வரையிலும் குறையாமல் இருந்து வருகிறது இவர் 2015ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து சந்திரமுகி என்ற ஒரு மாபெரும் பேய் படத்தை எடுத்தார்.
யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அந்த திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடிய தோடு மட்டுமல்லாமல் சினிமாவில் மிகப்பெரிய ஒரு சாதனையை படைத்தது. பல வருடங்கள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது இந்த படத்தையும் இயக்குனர் இவர்தான் தயாரிக்க உள்ளார்.
ஆனால் ரஜினிக்கு பதிலாக இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் அவருக்கு ஹீரோயினாக பல்வேறு முன்னணி நடிகைகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர்கள் எல்லாம் தற்போது நிராகரிக்கப்பட்டனர்.
இருப்பினும் ராகவா லாரன்ஸ்க்கு ஏத்த ஜோடியை தற்பொழுது தட்டி தூக்கி உள்ளது படக்குழு அந்த வகையில் பாகுபலி சீரிஸில் நடித்த அனுஷ்கா செல்லதை இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக தேர்ந்தெடுத்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெகுவிரைவிலேயே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல வருடங்கள் கழித்து அனுஷ்கா செல்லமும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தற்போது சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.