சினிமா உலகில் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் தயங்காமல் நடிக்க கூடிய நடிகர்கள் விரல்விட்டு என்னும் அளவிற்கு தான் இருக்கிறார்கள் அந்த லிஸ்டில் இடம் பெற்று இருப்பவர் நடிகர் ஆர்யா இவர் ஹீரோ, வில்லன், குணசத்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் பயப்படாமல் நடிக்கக்கூடிய ஒரு ஹீரோ..
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கேப்டன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் ஆர்யா ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த படத்தின் பூஜை கூட போடப்பட்டது அது யாருடனும் இல்ல இயக்குனர் முத்தையாவுடன் இணைந்து ஒரு பக்கா கிராமத்து கதையில் நடிக்க இருக்கிறாராம்.
இயக்குனர் முத்தையா கிராமத்து கதைகளை எடுப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர் இதனால் ஆர்யா மற்றும் முத்தையா இணையும் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போதைய அதிகரித்து காணப்படுகிறது முத்தையா கடைசியாக நடிகர் கார்த்தி அதிதீ ஷங்கரை வைத்து விருமன் என்னும் ஒரு கிராமத்து படத்தை கொடுத்தார்.
படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த படத்தை தொடர்ந்து ஆர்யாவுடன் கைகோர்த்து இருக்கிறார் இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சிம்பு பட பட நடிகை சித்தி இதானி நடிக்க இருக்கிறார் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் இந்த படத்தின் பூஜை தற்போது போடப்பட்டு இருக்கிறது.
இந்த பூஜையில் ஆர்யா, சாண்டி மாஸ்டர், சித்தி இதானி, இயக்குனர் முத்தையா மற்றும் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படங்களை..