நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தினை வம்சி இயக்குகிறார்.
இவ்வாறு வம்சி இயக்கத்தில் விஜயின் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் விஜயின் 66-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் குழுவினர்கள் மிகவும் தீவிரமாக வேலை செய்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகுவதாக பட குழுவினர்கள் அறிவித்துள்ளார்கள்.
மேலும் வாரிசு திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக விஜய் உடன் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் தமன் இவர் பாடியுள்ள பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பி கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாரிசு படத்தின் முதல் பாடல் தீபாவளியை முன்னிட்டு வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது. தற்பொழுது வரையிலும் விஜயின் வாரிசு படத்திலிருந்து போஸ்டர்கள் மட்டுமே வெளியாகி வரும் நிலையில் அடுத்தது சிங் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிட பட குழுவினர்கள் முடிவெடுத்துள்ளார்கள்.
இவ்வாறு வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்ததாக விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் இணைய உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் இந்த வருடம் இறுதியில் டிசம்பர் மாதம் அன்று தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் வாரிசு படத்தின் சூட்டிங் முடிந்தவுடன் அடுத்த படத்தில் நடிப்பதற்கான வேலைகளை பார்ப்பார் நடிகர் விஜய்.
கடைசியாக நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் கலவை விமர்சனத்தை பெற்ற நிலையில் வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரசிகர்கள் இந்த படத்தின் அப்டேட்டுக்காக மிகவும் ஆர்வமாக பார்த்து வருகிறார்.