நடிகர் அஜித்குமார் அண்மை காலமாக நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஹச் வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்திருக்கிறார்.
இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறதாம் இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு வேற லெவலில் இருக்கிறது இந்த படத்தில் அஜித் செம்ம கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார் என கூறப்படுகிறது அவருடன் கைகோர்த்து மஞ்சு வாரியார், சமுத்திரகனி, யோகி பாபு போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.
மேலும் பிக் பாஸ் பிரபலங்களான அமீர் சிபி போன்றவர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர் என சொல்லப்படுகிறது. படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்கு முன்பாக ரசிகர்களை சந்தோஷப்படுத்த அடுத்த அப்டேட்களை கொடுக்க ரெடியாக இருக்கிறது படக்குழு.
தற்பொழுது இந்த படத்தின் டிரைலர், டீசர் போன்றவை தீவிரமாக உருவாகி வருகிறதாம் வெகு விரைவில் ரசிகர்களுக்காக வெளியிடப்படும் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படத்தில் நடித்த நடிகை சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.
துணிவு திரைப்படத்தில் நடிகை மமதி சாரி நடித்துள்ளார். இவர் இந்த படத்தின் டப்பிங் பேசும்போது சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது துணிவு திரைப்படத்தில் நான் கொஞ்சம் காட்சிகளில் தான் நடித்துள்ளேன். அந்த சீன்லையும் நான் கெட்ட வார்த்தை பேசி இருக்கிறேன் என வெளிப்படையாக விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார் இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.