தமிழ் சினிமாவில் போட்டி போட்டுக்கொண்டு வெற்றி படங்களை கொடுத்து வருகின்றனர் அண்ணன் தம்பியான தனுஷ் மற்றும் செல்வராகவன்.
நடிகர் தனுஷ் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு படங்களை கொடுத்து வருவதால் அவரைப் பற்றிய பேச்சு ரசிகர்கள் மற்றும் மக்கள் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது. மேலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வேற லெவலில் ஹிட்டடிகத்தும் உள்ளன.
இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் இதுவரை காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்த நிலையில் தற்பொழுது நான்காவது முறையாக “நானே வருவேன்” என்ற திரைப்படத்தில் இந்த கூட்டணி இணைந்து உள்ளது.
முதலில் “நானே வருவேன்” என்ற டைட்டில் வைத்து அதன்பின் அது மாற்றப்பட்டது ஒரு கட்டத்தில் தனுஷ் ரசிகர்கள் நீங்களும் தனுஷ் இணையும் அந்த படத்தின் பெயரை கேட்க படத்தின் தலைப்பில் எந்த மாற்றமும் இல்லை “நானே வருவேன்” என கூறினார்.
இந்த படத்தின் சூட்டிங் வெகுவிரைவிலேயே துவங்க உள்ளது அதற்காக இயக்குனர் செல்வராகவன் ஒருவழியாக ஹீரோயின் மற்றும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருகிறார்.
அந்த வகையில் முதலில் “நானே வருவேன்” படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிகில், மகாமுனி படத்தில் நடித்த நடிகை இந்துஜாவை இந்த திரைப்படத்தில் வளைத்து போட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.